பாரதத்தின் முதுகெலும்பு கல்வி

திண்டுக்கல்லில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ‘பாரதம் முன்னேற்றம் அடைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 10 காரணங்களில் முதலாவதாக இருப்பது, கல்வியில் முன்னேற்றம் அடையாதது. நாம் முன்னேற முதுகெலும்பாக கல்வி மட்டுமே இருக்க முடியும். கல்வி, சுகாதாரம், வருமானம் அடிப்படையில் 180 நாடுகளில் பாரதம் 131வது இடத்தில் உள்ளது. தமிழகம் கல்வியில் 22வது இடமாக பின்தங்கியுள்ளது. இதற்கு, தற்போதைய கல்வி முறை தான் காரணம். பாரதத்தில் 35 ஆண்டுகளாக கல்வி கொள்கை அமல்படுத்தவில்லை. இப்போது தான் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை வந்தவற்றில் சிறந்தது இந்த கல்விக் கொள்கை தான். கல்வியில் அரசியல் செய்ய கூடாது. ‘நீட்’ தேர்வு இருந்தால் மட்டுமே சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியும். சிறு வயதிலேயே ஹிந்தி உட்பட பல மொழிகளை கற்க முயற்சிக்க வேண்டும்’ என கூறினார். பின்னர் பேட்டியளித்த அவர், ‘மாநில கல்விக் கொள்கையை வகுக்க 13 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது. இக்குழுவில் மூத்தவர்கள், கல்வி செயல்முறை மற்றும் நிர்வாகத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் யாரும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் தி.மு.க., ஆதரவாளர்களாக உள்ளனர். நீதித் துறையைச் சேர்ந்த ஒருவர் இதற்கு தலைமை வகிக்கிறார். தரமான கல்வி கொள்கையை உருவாக்குவதில் மாநில அரசுக்கு அக்கறையின்மையையே இது காட்டுகிறது’ என்றார்.