டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த 2020ல் ஹிந்து எதிர்ப்பு கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த கலவரத்தை நடத்தியவர்களின் உண்மையான நோக்கம், ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவது, அவர்கள் சொத்துக்களை கொள்ளையடிப்பது, எரிப்பது, மற்றும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதுதான் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட முகமது ஷாநவாஸ், முகமது சோயப், ஷாருக், ரஷீத், ஆசாத், அஷ்ரப் அலி, பர்வேஸ், முகமது பைசல், ரஷீத் என்ற மோனு மற்றும் முகமது தாஹிர் ஆகிய குற்றவாளிகள் மீது கலவரம், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவது, அத்து மீறி தாக்குதல் நடத்துவது, தீ வைத்தல், கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.