பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் சொர்க பூமியாக திகழ்வதாக பெரும்பாலான உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இதனை இம்ரான் கான் உள்ளிட்ட அனைத்து பாகிஸ்தான் பிரதமர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். எனினும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பது அவ்வபோது வெட்ட வெளிச்சமாகிறது. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் துருக்கி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் இம்ரான்கான். பயங்கரவாத அமைப்பினருடன் பாகிஸ்தான் அரசு சமாதானமாகச் சென்றால், பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு எவ்வாறு தண்டிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான்கான், சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்களை தங்கள் அரசு மன்னிக்கும். பயங்கரவாதிகளும் சாதாரண குடிமக்களாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்து பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.