கேரளாவின் ஆலப்புழாவில் சனிக்கிழமையன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற தீவிரவாத் அமைப்பினர் நடத்திய பேரணியில் ஒரு சிறுவன் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பியது பரபரப்பாகியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான அந்த வீடியோவில், பேரணியில் கலந்துகொண்ட ஒரு ஆண் தோளில் அமர்ந்துவரும் ஒரு சிறுவன், ‘ஹிந்துக்கள் தங்கள் இறுதிச் சடங்குகளுக்கு அரிசியை வைத்திருக்க வேண்டும், கிறிஸ்தவர்கள் தங்கள் இறுதிச் சடங்குகளுக்கு தூபம் வைக்க வேண்டும். நீங்கள் கண்ணியமாக வாழ்ந்தால் எங்கள் நிலத்தில் வாழலாம், ஒழுங்காக வாழாவிட்டால், எங்களுக்கு ஆசாதி (சுதந்திரம்) தெரியும். கண்ணியமாக வாழுங்கள்’ என கோஷமிட்டான். அதனை அக்கூட்டத்தினர் வழிமொழிந்தனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, ‘இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சிறார் நீதிச் சட்டத்திற்கு எதிரானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுகிறோம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தெரிந்தே செய்யும் குற்றம்” என்று கூறினார்.
பி.எப்.ஐ அமைப்பினர், ‘இந்த முழக்கம் எங்களுடையது அல்ல. ஊர்வலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சில தொண்டர்கள் இந்த முழக்கம் எழுப்பப்பட்டதை கவனித்தபோது அதனை தடுத்தனர்’ என்று தெரிவித்தனர்.
‘இந்த வீடியோ தற்போதுதான் எங்கள் கவனத்திற்கு வந்தது, இது எங்கு நடந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்த விசாரணையை துவக்கிவிட்டோம்’ என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு கஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் பயங்கரவாதிகள் தங்களின் பயங்கரவாதம், கல்லெறிதல் போன்ற கொடூர செயல்களின்போது சிறுவர்களையும் பெண்களையும் முன்னிறுத்தி தப்பித்துக்கொள்வது என்பது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக அவர்கள் கடைபிடிக்கும் ஒரு நடைமுறை. அது தற்போது இந்த ஊர்வலத்திலும் கடைபிடிக்கப்பட்டு உள்ளது என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.