ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், அவற்றிற்கு நிதியுதவி செய்வோர் பற்றி என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த விசாரணையில் சில என்.ஜி.ஓக்கள் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. ஜம்மு – காஷ்மீர் கொலிஷன் ஆப் சிவில் சொசைட்டி என்ற என்.ஜி.ஓ அமைப்பு, பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அதன் தலைவர் குர்ரம் பர்வேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் ‘ஆசியா ஜிலானி டிரஸ்ட், ஆக்சன் எய்டு இன்டர்நேஷனல்’ உட்பட வேறு பல அமைப்புகளும் கோடிக்கணக்கில் பணம் பெற்று அதனை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களின் வரைபடங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருட்கள், பயங்கரவாதத்தை துாண்டும் போஸ்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கர்தார்பூர் நடைபாதை வழியாக சீக்கிய உடையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை பாரதத்திற்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தானின் உளவுத்துறை திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.