பயங்கரவாதிகளின் புகலிடமாகும் தென்காசி

வி.ஹெச்.பி தலைவரின் கடை எரிப்பு

தென்காசியில் உள்ள புளியங்குடியின் விஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் அழகு என்பவரின் ‘சுப்புலட்சுமி டிம்பர்‌ டிப்போ’ என்ற மரக்கடையை அங்குள்ள சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசி எரித்துள்ளனர். இதில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சாம்பலானது. அவரது மரக்கடை அருகில் வி.ஹெச்.பி அமைப்பின் அலுவலகத்தை அவர் மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் திறந்து வைத்தார். இதனால்தான் அவரது கடையை முஸ்லிம் அடிப்படைவாதிகள் எரித்துள்ளனர் என நம்பப்படுகிறது. தென்காசியில் ஹிந்து அமைப்பினரை இதற்கு முன்பாக முஸ்லிம் பயங்கரவாதிகள் கொலை செய்த போதும், ஹிந்து கடைகளுக்கு தீ வைத்து எரித்த போதும் மின்சாரம் அணைக்கப்பட்டே சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர். தற்போதும் அவ்வாறே நடந்துள்ளது.

போராட்டம்:

முஸ்லிம் பயங்கரவாதிகளின் இந்த அராஜகத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கோரியும், பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று காலை வி.ஹெச்.பி அமைப்பினர் ராஜபாளையம் தென்காசி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். மாலை 4.30 மணி அளவில் புளியங்குடியில் ஜெய்காளி கோயில் திடலில் வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று கடையடைப்பு நடைபெற உள்ளது.

தென்காசி அராஜகம்:

தென்காசி மாவட்டம் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் அடிப்படைவாதிகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது. அங்கு அவர்கள் வைப்பதே சட்டம். அரசு அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாது என்பதே எதார்த்தம். உதாரணமாக, கொரோனா காலத்தில் அதிகளவு மக்கள் கூடுகிறார்கள் என்று ஒரு முஸ்லிம் மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால், அரை மணி நேரத்திலேயே அந்த சீல் முஸ்லிம்களால் அகற்றப்பட்டு மீண்டும் வியாபாரம் துவங்கப்பட்டது. இப்படி ஒன்றிரண்டு அல்ல பல சம்பவங்கள் உள்ளன. குடிநீர் குழாய் இணைப்பு, கடை உரிமம் என பலவற்றிலும் இவர்களின் செயல்பாடுகள் இதுதான் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.