கன்யாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே புகழ் பெற்ற இசக்கி அம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலை நேற்று காலை பூசாரி திறந்தபோது, உள்ளே இருந்த சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் கோயிலின் சி.சி.டிவியை ஆய்வு செய்தபொது, ஒரு மர்ம இளைஞர் கோயிலில் நுழைந்து அங்குள்ள சுவாமி சிலைகளை சேதப்படுத்துவது பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது. காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அரசு ஒருபக்கம் கோயில்களை இடித்துத்தள்ளி வருகிறது என்றால் மறுபக்கம் இதுபோன்ற கோயில் சிலைகள் உடைப்பு, கலசங்கள் திருட்டு, வேற்று மதத்தினர் கோயில்களை இழிவுபடுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.