கோயில் பூஜாரி அடித்துக் கொலை

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் ஞானபுரா கிராமத்தில் உள்ள ஒரு அனுமன் கோயிலின் வளாகத்திற்கு வெளியே சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றித் திரிந்தனர். கோயிலுக்குள் தங்கி இருந்த அக்கோயிலின் பூஜாரி, அருந்தாஸ், ஏன் கோவிலுக்கு வெளியே அலைகிறீர்கள் என்று கேட்டார். இதனையடுத்து அவர்கள் பூஜாரியை கற்களாலும் கட்டைகளாலும் கடுமையாகத் தாக்கினர். தடுக்க வந்த காவலாளியையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த பூஜரியை ஊர் மக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார் காவலாளி. ஆனால், சிகிச்சை பலனின்றி பூஜாரி உயிரிழந்தார். துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) மோனிகா சிங் தலைமையில் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.