அம்ருத் என்னும் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த பாதாள சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்து அதை வெளியேற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, 800 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திருக்கோயிலான ஸ்ரீ அஞ்சல் நாயகி சமேத ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கோயில் நிலத்தில் கட்டடம் கட்ட இராஜபாளையம் நகர திட்ட அலுவலகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக இடத்தை மாற்றவும், இந்த திட்டத்தை வகுத்து கொடுத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி ராஜபாளையம் நகர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக பூஜ்ய ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் தலைமையில், சிவனடியார்கள், ஹிந்து அமைப்பினர் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.