சிதம்பரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.கவின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், ‘தமிழக கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கக் கூடாது. ஹிந்து மத நம்பிக்கைகளை, கோயில்களை இவர்களால் நடத்த முடியாவிட்டால் அதை மக்களிடம் கொடுத்துவிடலாம். அதனை அந்தந்த பகுதியில் உள்ள ஹிந்துக்களே நடத்திக் கொள்வார்கள். கோயில்களை அரசு கையகப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கி விற்கக்கூடிய திட்டம் என்பது ஹிந்து மத நம்பிக்கையை தரைமட்டம் ஆக்குவதற்கான மிகப்பெரிய சூழ்ச்சி.
மக்களை ஏமாற்றும் தி.மு.க அரசு தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏழைப் பெண்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரையும் ஏமாற்றி மோசடி செய்வதால் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அதனால் சாதனைகளைச் சொல்லி வாக்குகள் பெற முடியாது என்பதால் சாராய பாட்டில்களையும் பணத்தையும் வைத்து ஏழைகளிடம் வாக்கு சேகரிக்கிறது. டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழிகின்றன. ஊழல் ஆட்சியின் மொத்த உருவமான தி.மு.க, இதுபோன்று செய்வதை பா.ஜ.கவினர் வன்மையாக கண்டிக்கிறோம்’ என கூறினார்.