மாணவர்களை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்

செஞ்சியில் அரசு பள்ளி மாணவர்களை பிரம்பால் தாக்கிய ஆசிரியரை கண்டித்து, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால். 48. ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 இயற்பியல் ஆசிரியர். மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மாதாந்திர தேர்வு நடத்தினார். சரியாக தேர்வு எழுதாத சில மாணவர்களின் முதுகிலும், கையிலும் பிரம்பால் அடித்தார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர், 15க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளி தலைமையாசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தலைமையாசிரியர் கணபதி, அவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது ஆசிரியர் தாக்கியதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை தலைமையாசிரியரிடம் பெற்றோர் காண்பித்தனர். மேலும், ஆசிரியர் நந்தகோபாலை பணி நீக்கம் செய்யவேண்டும் என, மனு கொடுத்தனர். செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா விசாரணை நடத்தி, ஆசிரியர் நந்தகோபாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.