தமிழகம் இரண்டாமிடம்

மத்திய அரசின், ‘உதயம்’ இணையதளத்தில், 2020 ஜூலை 1 முதல் மத்திய அரசு திருத்தியமைத்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வகைப்படுத்தலுக்கான அளவுகோல்களை ஒட்டி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும். இதில், தமிழகத்தில், 2020 ஜூலை 1 முதல், 2021 ஜூலை 31 வரை, நான்கு லட்சத்து 1,319 தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றின் மூலம் வாயிலாக, 53 ஆயிரத்து 801 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 41.69 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தேசிய அளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையில் உதயம் இணையதளத்தில் பதிவு செய்தவர்களை கொண்டுள்ளது.