இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இஸ்லாமிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில், கல்லூரி மாணவர் மாணவியரிடையே ஒரு திரை அமைத்து பிரிக்கப்பட்டு இருதரப்பினருக்கும் தனியாக இருக்கைகள் போடப்பட்டது. இக்கருத்தரங்கை அப்துல் ஃபாசில் என்ற சர்ச்சைக்குரிய நபர் “ஞானம்” என்ற பெயரில் நடத்திய இந்த கருத்தரங்கின் தலைப்பு “The lives and Ideals Behind Gender Politics” (பாலின அரசியலுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை மற்றும் லட்சியங்கள்). இந்த விவகாரம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.