சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி போராடினர். இதையடுத்து தமிழகத்தில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பீட்டா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி மணிலால் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தற்போது ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் உள்ளதால் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளுக்கு இடமளிக்க கூடாது, மருத்துவர்களின் கருத்துகளுக்கு செவிசாயத்து பொதுமக்களை ஆபத்தான நோயில் இருந்து காக்கவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 80 மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு பீட்டா அமைப்பு உள்ளிட்டோரின் சதி வலையில் சிக்கக் கூடாது, பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.