ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது. உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். பல லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு மனிதாபிமான உதவியாக, கடந்த கொரோனா காலகட்டத்தில் பாரதம் சிரியாவிற்கு 10 மெட்ரிக் டன் மருந்துகளை பரிசளித்தது. தற்போது, தற்போது உணவு பாதுகாப்பிற்காக சிரியா அரசின் கோரிக்கையை ஏற்று அவசர உதவிக்காக சுமார் 2,000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளை பாரதம் பரிசாக வழங்குகிறது. முதல் 1,000 மெட்ரிக் டன் அரிசியை சிரியாவிற்கான பாரதத் தூதர் ஹிஃப்ஸூர் ரஹ்மான், சிரியாவின் உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் ஹுசைன் மக்லூஃப்பிடம் லடாகியா துறைமுகத்தில் ஒப்படைத்தார். மீதமுள்ள 1000 மெட்ரிக் டன் அரிசி பிப்ரவரி 18ல் சிரியா சென்றடையும்.