மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் பாரத இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, நமது பாரத இசைக் கருவிகளான புல்லாங்குழல், வயலின், ஹார்மோனியம் போன்றவற்றின் இசையில் ஹாரன் ஒலி அமைப்பதை ஆய்வு செய்து வருகிறோம். இதேபோல, காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலிகளும் ஆல் இந்தியா ரேடியோவில் உள்ள இசை போல் காதுகளுக்கு இனிமையாக இருக்கும் வகையில் மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.