மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்பு பயங்கரவாத சம்பவம் குறித்த விசாரனையில் ஒரு முக்கிய திருப்பமாக, அந்த வெடிகுண்டு நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னதாக, அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட செயற்கைக்கோள் அலைபேசி (சாட்டிலைட் போன்)செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள செயற்கைக்கோள் தொலைபேசியில் இருந்து சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மேலும், அப்போது, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய வனப்பகுதிகளில் இருந்தும் செயற்கைக்கோள் அலைபேசிகள் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு ஒரு நாள் முன்பு, பண்ட்வால் கிராமத்திற்கு அருகிலுள்ள கக்கிஞ்சே காட்டில் செயற்கைக்கோள் தொலைபேசி செயல்பாட்டில் இருந்தது. ஷாரிக் பண்ட்வால் பகுதியை அடைந்ததும், செயற்கைக்கோள் போன் அதிக சுறுசுறுப்பாக பயன்பாட்டில் இருந்தது. எனவே, மற்ற ஸ்லீப்பர் செல்களுடன் தொடர்பை ஏற்படுத்த ஷாரிக் காட்டுப் பகுதிக்கு சென்றதாக காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். சாட்டிலைட் போனின் இருப்பிடத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா, தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவாளர்களை சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த மங்களூரு குண்டுவெடிப்புக்கு அதிகம் அறியப்படாத முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய எதிர்ப்பு கவுன்சில் (IRC) பொறுப்பேற்றதும் முகமது ஷாரிக் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டதும் நினைவு கூரத்தக்கது.