டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆதரவு

பாரதத்தை சேர்ந்த டெலிகாம் நிறுவனங்களைக் கடன் சுமை, நிலுவைத் தொகை பாதிப்பில் இருத்து காப்பாற்ற வேண்டும் என நோக்கத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பரிந்துரை செய்த முக்கியமான தளர்வு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இத்தளர்வு திட்டத்தில், டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, பங்குகளாக அரசுக்குச் செலுத்துவது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், இந்நிறுவனங்கள் அவற்றின் கடன், வட்டி சுமையில் இருந்து விடுபட்டு முன்னேறும். இத்துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் உரிமம் கட்டணம், ஸ்பெக்டரம் கட்டணம் மீதான வட்டி, அபராதத்தில் தளர்வு, வட்டிகள் அனைத்தும் மாதாந்திர அடிப்படையில் இல்லாமல் வருடாந்திர அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியானது.