அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டார் செந்தில் பாலாஜி. இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இவர் தி.மு.கவில் இணைந்து மின்சாரத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். இதனையடுத்து பணம் திருப்பித் தந்ததாகக்கூறி அதில் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் அவர் மீது உள்ள 2 பண மோசடி வழக்குகளை விசாரிக்க, அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி வரும் 11ம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.