இலங்கை செல்லும் சுப்ரமணிய சுவாமி

ஹிந்து மத திருவிழாவான நவராத்திரியை முன்னிட்டு, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்துடன் நவராத்திரியை கொண்டாட கொழும்புவுக்கு பா.ஜ.க மூத்தத் தலைவரான சுப்ரமணிய சுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சுப்ரமணிய சுவாமி, ‘அங்கு சென்று தேசிய பாதுகாப்பு குறித்து நான் இலங்கை பாதுகாப்பு படைத் தலைவர்களிடம் பேசுவேன். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் பிரதமர் ராஜபக்சே அழைத்திருக்கிறார். இலங்கை, பாரதம் மற்றும் சீனாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளைக் கொண்டிருப்பதால், தலைமைத்துவத்தில் உள்ள யாரையும் சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இலங்கைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்தால், அவரை சந்தித்து பேச நேர்ந்தால், சீனாவை லடாக்கிலிருந்து வெளியேறச் சொல்வேன் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.