மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

புனேவில் உள்ள சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, முடிவற்ற வாய்ப்புகள் உள்ள தலைமுறையை மாணவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இன்று நமது நாடு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு இன்று நம் நாட்டில் உள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்றவை உங்கள் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றன. பாரதம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இருப்பதால், பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய நாடுகள் கூட உக்ரைனில் சிக்கித் தவித்த தங்கள் நாட்டு மக்களை மீட்க முடியாமல் தத்தளித்தன. ஆனால், உலக அரங்கில் பாரதத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கினால் நமது குடிமக்களை மீட்க முடிகிறது. பாதுகாப்புத் துறையில் முன்னர் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த நமது நாடு இப்போது ஏற்றுமதியாளராக மாறி வருகிறது. மொபைல் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக பாரதம் உருவெடுத்துள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டில், புதிய பாரதத்தைக் கட்டியெழுப்பும் புதிய இலக்குகளுடன் நாம் முன்னேறி வருகிறோம். நமது இளம் தலைமுறை இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அனைத்துத் துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் சாதனையை உருவாக்குவதற்காக அல்ல.  இவை உங்களுக்கு வாய்ப்புகள்’ என தெரிவித்தார்.