கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதியாக தமிழக கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரியில் அன்றைய முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இது பல ஏழை மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இத்திட்டத்தின் பயன் கடந்த 18-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. எனவே, அந்த திட்டத்தை உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.