வைரமுத்துவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

நான் மட்டுமல்ல இதேபோல 9 அப்பாவி பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து கடுமையாக போராடி வரும் எனக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பல இன்னல்கள் வருகின்றன என்று பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி ‘மீ டூ’ விவகாரத்தில் வைரமுத்துவின் போலி பிம்பத்தை உடைத்தார். இந்நிலையில், வைரமுத்து மீது குழந்தைகளின் மனதில் பாலியல் எண்ணங்களைத் தூண்டும் வகையில் பாடல் எழுதியதாக, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் புகார் அளித்துள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை, தி.மு.கவில் தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கு மூலம் தொடர்ந்து தப்பி வருகிறார் வைரமுத்து.தற்போது மலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது வைரமுத்துவிற்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி ‘பெருமைக்குரிய ஓ.என்.வி ஐயாவின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது’ என்று பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.ஓ.என்.வி அமைப்பும் இது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறது.