கேரள மாநிலம் கோட்டாங்கல் பஞ்சாயத்தில் உள்ள சுங்கப்பாறையில், எஸ்.டி.பி.ஐ கட்சியினர், டிசம்பர் 6’ஐ முன்னிட்டு தேசத்தில் கலவரம் ஏற்படுத்தும் விதமாக ‘நான் பாப்ரி’ “I Am Babari” என்ற சிறிய அட்டைகளை செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பயிலும் அப்பாவி மாணவர்களின் சட்டைகளில் குத்திவிடுகின்றனர். இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்த சம்பவம் கேரள மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள பா.ஜ.க தலைவர் சுரேந்திரன், ‘கேரளாவை இன்னொரு சிரியாவாக மாற்ற கம்யூனிஸ்ட்டுகளும் எச்.டி.பி.ஐ கட்சியினரும் கூட்டணி வைத்து முயற்சிகளை மேற்கொள்கின்றனரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் முகம்தான் எஸ்.டி.பி.ஐ கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.