வாட் வரியை குறைக்காத மாநிலங்கள்

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளது.இதனையடுத்து பல மாநிலங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) குறைத்துள்ளன. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய பாஜக அல்லாத ஆறு மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைக்காததால், அங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதில் சில மாநிலங்கள் வாட் வரியை 17 ரூபாயாக நிர்ணயித்துள்ளன.ஆனால், மற்ற பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் 32 ரூபாய் வாட் வரி வசூலிக்கின்றன.அதனால் விலை அதிகமாக் உள்ளது.இன்று சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகம் என்று உறுப்பினர் கூறுகின்றனர்.ஆனால் மற்ற மாநிலங்களில், 8 முதல் 10 ரூபாய் வரி விலை மலிவாக கிடைக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரதத்தில் தற்போது பெட்ரோல் விலை மிகக் குறைந்த விலையில் உள்ளது.

பாரதம் தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் அந்தந்த விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2020 மற்றும் நவம்பர் 2022க்கு இடையில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 102 சதவீதம் வரை அதிகரித்திருந்தாலும் இந்த காலகட்டத்தில் பாரதத்தில் பெட்ரோல், டீசல் சில்லறை விலைகள் 18.95 முதல் 26.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் வரலாறு காணாத விலை உயர்ந்த போதிலும், 2022 ஏப்ரல் 6 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதன் விளைவாக, 2021ம் நிதியாண்டின் முதல் அரையண்டில் 28,360 கோடி ரூபாய் வரிக்கு முந்தைய லாபம் சம்பாதித்த அரசு எண்ணெய் நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 27,276 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தில் இருந்து நமது மக்களை காப்பற்றுவதற்காக, மத்திய அரசு நவம்பர் 21, 2021 மற்றும் மே 22, 2022 ஆகிய தேதிகளில் மத்திய கலால் வரியை இரண்டு முறை குறைத்துள்ளது.

பாரதம் தனது உள்நாட்டு எல்.பி.ஜி நுகர்வில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.இது சர்வதேச அளவில் சௌதி ஒப்பந்த விலையை அடிப்படையாகக் கொண்டது.சௌதியில் ஏப்ரல் 2020ல் 236 டாலராக இருந்த எரிவாயு விலை 2022 ஏப்ரலில் 952 டாலர்களாக உயர்ந்துள்ளது.தற்போதும் உயர்ந்த நிலையிலேயே தொடர்கிறது.இருப்பினும், உள்நாட்டு எல்.பி.ஜிக்கான விலையை நுகர்வோருக்கு அரசு தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது.இதனால் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.இந்த இழப்பை ஈடுகட்ட அவர்களுக்கு ரூ.22,000 கோடி இழப்பீடு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என தெரிவித்தார்.எனினும், அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத காங்கிரஸ், தி.மு.க, திமுக, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.