ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோர்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் கொண்டும், அடிமட்டத்தில் உள்ளவர்களை தொழில்முனைவோராக்கி, பொருளாதார அதிகராப்படுத்துதல் மற்றும் வேலை உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டும், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது. 15வது நிதி ஆணையத்தின் 2025 வரையிலான காலத்திற்கும் அது நீட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்துள்ள செய்தியில், “ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டு நிறைவை நாம் நினைவு கூரும் வேளையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1.33 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவோர், தொழில்முனைவோருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் பலனடைந்துள்ளனர். விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் சொந்த தொழிலைத் தொடங்கி வளர இது வழிவகுக்கும். இதுவரை பலனடையாத தொழில்முனைவோர் அதிக அளவில் பயனடையும் விதமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தற்சார்பு பரதத்தை உருவாக்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நாம் தடம் பதிக்க வேண்டும். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 21.03.2022 வரை, 1,33,995 கணக்குகளுக்கு ரூ. 30,160 கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.