ஸ்டாலினின் ஆளுமை

சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலையடுத்து கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவில்களில் அவர்களுக்கு எதிராக நின்று வெற்றி பெற்ற தி.மு.கவினர், பதவியை ராஜினாமா செய்யே வேண்டும், என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உத்தவிட்டார். ஆனால், ஸ்டாலினின் உத்தரவை அவர்களில் சிலர் மதித்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற சாந்தி ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். இதேபோல தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்துத் தலைவர் பதவி, கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி போன்ற சில பதவிகளை கூட்டணிக் கட்சியினரிடம் இருந்துத் தட்டிப்பறித்த தி.மு.கவினர் அப்பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்துள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது சுட்டு விரல் அசைவுக்கு தொண்டர் முதல் எம்.எல்.ஏ, எம்.பி வரை அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். அப்படி இல்லாதவர்கள் கட்சியை விட்டு, பதவியை விட்டு உடனடியாகத் தூக்கி எறியப்படுவார்கள். அப்படிப்பட்ட அவரது ஆளுமை நாடு முழுவதும் பிரபலம். ஆனால், ஸ்டாலினின் ஆளுமை இவ்வளவுதான் என சொந்தக் கட்சியினரும் கூட்டணியினரும் புலம்பி வருகின்றனர்.