ஸ்டாலின் மோடிக்கு கோரிக்கை

தமிழகத்தில் 8 மாநில நெடுஞ்சாலைகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வசதியாக அவற்றை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும். இவை திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் புனிதத் தலங்களை இணைக்கும் சாலைகள். இச்சாலைகளை உடனடியாக புதிய தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவித்து தேவையான நிதியுதவியுடன் வளர்ச்சி பணிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் இருந்து ஒன்று தெளிவாக புரிகிறது. ஒரு மாநில அரசே 22,494 கோடி ரூபாயையை செலவு செய்து மூன்று வருடங்களில் நாட்டின் நீளமான 340 கி.மீ அதிவிரைவுச் சாலையை, விமானம் இறங்கும் வசதியுடன் அமைத்தால் அது பா.ஜ.க அரசு. ஆனால், இருக்கும் 500 கி.மீ சாலையைகூட விரிவுபடுத்த முடியாமல் மத்திய அரசிடம் ஒப்படைத்து அதற்கு நிதியுதவியையும் செய்துதர கேட்டால் அது விடியல் அரசு.