பீஹார் வந்திருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் காலில் விழுந்து வணங்கினார். 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என இலக்குடன் அனைத்து எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைத்து, ஒரே கூட்டணியாக போட்டியிட வைக்க, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் முயற்சித்து வருகிறார். இதையடுத்து நடந்த பல கட்ட பேச்சுக்குப் பின், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடக்கவுள்ளது.இதில் பங்கேற்க வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த லாலு பிரசாத் யாதவ் காலில் விழுந்து ஆசி பெற்றார்.இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், லாலு காலில் விழுந்து அவருக்கு சால்வை அணிவித்து, கலைஞர் பற்றிய புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி ஆசிபெற்றார்.இதன் வீடியோ புகைபடங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.