போக்சோவில் தி.மு.க கவுன்சிலர் மகன்

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக மக்கள் கருதி வரும் நிலையில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக கொலை, கொள்ளை, கடத்தல், போதை மருந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என சட்டவிரோத நடவடிக்கைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தி.மு.க கவுன்சிலர்கள், அவர்களது உறவினர்களின் கொட்டமும் தாங்கமுடியாத அளவிற்கு உள்ளது. அவ்வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாயாவதி தவபாலன் என்பவர், அப்பகுதி தி.மு.க ஒன்றிய கவுன்சிலர். இவரது மகன் தமிழழகன்’ ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழழகன் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணிடம் பாலியல் உறவும் வைத்துள்ளார். தற்போது அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு தமிழழகனிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு தமிழழகன் மறுத்துள்ளார். இதனையடுத்து வேறுவழியின்றி பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தமிழழகன் மீது உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துரையினர் தமிழழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தி.மு.க சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், வழக்கம்போல பெரும்பாலான ஊடகங்கள் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.