சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான பொருளாதார நிலைக்கு இடையே பாரதத்தின் 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி) 4.1 சதவீதமாக கணக்கிடப்பட்டு உள்ளது. இது கடந்த 3வது காலாண்டில் 5.4 சதவீதமாகவும் 2ம் காலாண்டில் 8.4 சதவீதமாகவும் முதல் காலாண்டில் 20.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பணவீக்கம், சர்வதேச அளவில் பல்வேறு மூலதன பொருட்கள், உணவு பொருட்கள், தானியங்கள், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பலவற்றின் அதிகப்படியான விலையேற்றம், ஒமிக்ரான் மாறுபாடு, ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பு போன்றவையே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகின்றன. மேலும், உலக அளவிலான இந்த பிரச்சனைகள் இன்னமும் தீராத நிலையில், வரவிருக்கும் காலாண்டிலும் அதன் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாரதத்தின் நடப்பு நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது.