மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் ஜெனரல் வி.கே சிங் இருவரும் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் (என்.ஆர்.எஸ்.சி) கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இக்கூட்டம் கூடி தங்கள் புதுப்பிப்புகளை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சோர்வினால் ஏற்படும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக, விமான பைலட்டுகள், ரயில் இஞ்சின் டிரைவர்கள் போலவே, லாரி போன்ற வணிக வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர் நேரத்தை தீர்மானிக்க கொள்கைகள் வகுக்க வேண்டும் . ஐரோப்பிய தரத்திற்கு இணையாக, வணிக வாகனங்களில் தூக்கத்தைக் கண்டறியும் சென்சார்களை இணைக்கும் கொள்கையை வகுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறினார்.