ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் அனில் மிஸ்ரா, ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஸ்ரீராம ஜென்ம பூமியில் அமைய உள்ள பிரம்மாண்டமான ஸ்ரீ ராமரின் கோயிலின் வெளி பிரகாரத்தில், சூரியன், விநாயகர், சிவன், துர்கை, விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட ஆறு தெய்வங்களுக்காக தனித்தனியாக ஆறு கோயில்கள் கட்டப்படும். வரும் நவம்பர் முதல் வாரத்தில் ராமர் கோயிலின் அடித்தளத்தை நிர்மாணிக்கும் பணி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.