ஐயா “தாணுலிங்க நாடாா் “

ஹிந்துத்துவ நாயகா் , ஹிந்துமுன்னணி நிறுவனத்தலைவர் ஐயா “தாணுலிங்க நாடாா் ” அவா்களின் (பிப்-17) 108 வது பிறந்த தினம்.
மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் க‌லவரத்தை நிறுத்தும் விதமாக சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை.
அப்போது அக்கினி பிழம்பாக கொதித்துப் போன தாணுலிங்க நாடார், “நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு, இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும்” என முதலமைச்சர் எம்ஜிஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னவர் இவர்.
இந்த சம்பவத்தை பெருமையோடு மக்கள் நலன் விரும்பும் சரிநிகா் தலைவர் என சட்டமன்றத்திலேயே பதிவு செய்தார் எம் ஜி ஆர் அவர்கள்.
1948 முதல் 1951 வரை மூன்று வருடம் அன்றைய திருவிதாங்கூர்–கொச்சி சமஸ்தான சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1953–ல் நாகர்கோவில் நகர்மன்ற உறுப்பினராகவும், இரண்டாவது முறையாக திருவிதாங்கூர்–கொச்சி சமஸ்தான சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
.
1954–ல் திருவிதாங்கூர் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதம் சிறையில் இருந்தார்.
1957 முதல் 1962 வரை 5 வருடம் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராகவும், 1964 முதல் 1969 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
இறுதிநேரத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிமுடித்த பின் சித்திரகுப்தன் என் கணக்கு முடிந்ததாக தெரிவித்துவிட்டான். இனி இளைஞர்களாகிய நீங்கள் ஹிந்து தா்ம பணியினை சீரும் சிறப்புமாக தொடர்வீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது எனதருமை பாரததாய்க்கு என் வந்தனங்கள் வந்தே மாதரம் என முழங்கிய பின் தன்னுடலை நீத்தவர் என்னவொரு அப்பழுக்கற்ற தேசபக்தி. தியாகசீலாின் நினைவை போற்றுவோம்!
ஜெய்ஹிந்த்!
திரு.ரஞ்ஜீத் வி.சி !