சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவால் (சி.எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் இந்த விருது நாட்டின் மிகவும் பெருமை வாய்ந்த அறிவியல் பரிசாக கருதப்படுகிறது. சி.எஸ்.ஐ.ஆர் நிறுவன தினமான 2021 செப்டம்பர் 26 அன்று இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. கணித அறிவியல் நிறுவனத்தில் 2008ம் ஆண்டு தத்துவார்த்த கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் சாகேத் சௌரப்பிற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் சென்னையை சேர்ந்தவர். சாஹேத், நார்வேயில் உள்ள பெர்கென் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதற்கு பின்னர் 2009ல் கணித அறிவியல் நிறுவனத்தின் ஆசிரியர் குழுவில் இணைந்தார். அளவுரு சிக்கல்கள், வரைபட வழிமுறைகள் உள்ளிட்டவற்றில் இவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.  இரண்டு புத்தகங்களை எழுதியதோடு பல்வேறு ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டுள்ளார். 14 முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.