தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டுள்ள பாரதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. அதே சமயம், அங்கு செயல்படும் சேவா இன்டர்நேஷனல் ஐரோப்பா அமைப்பும் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (ஹெச்.எஸ்.எஸ்) இணைந்து அங்குள்ள பாரத மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட 10 முக்கிய நகரங்களில் சேவா ஐரோப்பா செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 26 அன்று, ஹெச்.எஸ்.எஸ் உக்ரைன், சேவா ஐரோப்பாவின் முயற்சியால் 150 மாணவர்கள் வின்னிட்சாவிலிருந்து செர்னோவ்ட்ஸிக்கு பேருந்துகள் மூலம் பத்திரமாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், உணவு , ருமேனிய எல்லைக்கு செல்லும் பயணத்திற்கான போக்குவரத்து போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. சேவா ஐரோப்பா ஹெல்ப்லைனில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான தகவல், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.