அடுத்தவர் செலவில் விளம்பரம்

தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து இருந்தார். ஆனால், ரிலையன்ஸ் செய்த உதவிக்கு, அம்பானியின் புகைப்படத்தை போடாமல், முதல்வர் ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியத்தின் புகைப்படம் உள்ள பேனரை வைத்து சுய விளம்பரம் தேடிக்கொண்டுள்ளனர் தி.மு.கவினர்.