தெலுங்கானா, ரெங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துவான நாகராஜு என்பவர், செகந்திராபாத் நகரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணான அஸ்ரி சுல்தான் என்ற பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி, கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின், அஸ்ரி சுல்தான் தன் பெயரை பல்லவி என மாற்றிக் கொண்டார். இதையறிந்த அஸ்ரியின் பெற்றோரும் சகோதரர்களும் ஆத்திரம் அடைந்தனர். அஸ்ரியின் சகோதரர்கள் கொலை செய்ய தங்களை தேடுவதை அறிந்த நாகராஜு தன் மனைவியுடன் விசாகப்பட்டினம் சென்று நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்தார்.அஸ்ரி குடும்பத்தினர் சமாதானம் ஆகியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஹைதராபாத் திரும்பினார். அவர்கள் வந்ததையறிந்த அஸ்ரி சுல்தானின் சகோதரர் செய்யது மொபின் அகமது தன் சக நண்பர்களுடன் சேர்ந்து நாகராஜுவை கடப்பாரையால் குத்தி கொலை கொடூரமாகக் செய்தனர். காவல்துறையினர் செய்யது மொபின் அகமதுவை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். ”எங்கள் எதிர்ப்பை மீறி என் தங்கை ஹிந்து மதத்தை சேர்ந்த நாகராஜுவை திருமணம் செய்ததால் கொலை செய்தேன்,” என செய்யது மொபின் அகமது வாக்குமூலம் அளித்தார்.