கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை சம்பந்தமாக, பள்ளி, கல்லூரிகளில் சீருடையை வலியுறுத்தி காவித்துண்டு அணிந்திருந்தார் பஜ்ரங் தள உறுப்பினர் ஹர்ஷா. இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம் மதவெறி கும்பல் ஒன்றால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஒரு காவலர், புகைப்பட பத்திரிக்கையாளர் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். 20 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றில் சில தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல்துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இவ்வழக்கில், ஹர்ஷா கொலையில் காரில் வந்த ஐந்து பேர் இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் காசிப் என்பவனும் மேலும் இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். தப்பிய 2 குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஹர்ஷாவை கொன்றதை காசிப் ஒப்புக்கொண்டான்.