மமதாவுடன் மிக நெருக்கமாக இருந்த திருணமூல் காங்கிரஸின் மூத்த்த் தலைவரான சுவேந்து அதிகாரி, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். ‘நந்திகிராம் தொகுதியில், என்னை எதிர்த்து போட்டியிடும் மமதாவை 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்காவிட்டால், அரசியலில் இருந்தே விலகுகிறேன்’ என சவால் விட்டார். தேர்தல் கணிப்புகளும் இம்முறை மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கிறது. இதனால் பயத்தில் உறைந்துபோய் உள்ள மமதா நந்திகிராமில் ஒரு பிரசாரக் கூட்டத்தில், ‘நானும் ஒரு பிராமண ஹிந்து பெண் தான். தினமும் நான் ‘சாந்திபத்’ சுலோகங்களை கூறிவிட்டுதான் வீட்டில் இருந்து புறப்படுவேன். ஹிந்து தர்மத்தை எனக்கு யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை’ என்று கூறி, சில சுலோகங்களையும் பாடிக் காட்டினார். முன்னதாக தோல்வி பயம் காரணமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மமதா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.