மண் வளம் காக்க சத்குரு பயணம்

உலக அளவில் மிக வேகமாக மண் வளம் சீர்கெட்டு வருகிறது. இதனை தடுக்க ‘மண் வள விழிப்புணர்வு’ பிரசார பயணத்தை ஈஷா அறக்கட்டளை துவக்கியுள்ளது. இதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் 100 நாட்களில் 26 நாடுகளுக்கு பயணித்து ஜூன் 21ல் சர்வதேச யோகா தினத்தன்று காவிரி படுகையை வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த பிரசாரத்தை 350 கோடி மக்களிடம் கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தை துவக்கிய ஜக்கி வாசுதேவ் பேசுகையில், ‘பூமியின் மண் வளம் பாதிப்படைந்து வருகிறது. இது உணவு தானிய உற்பத்தி, குடிநீர், பருவநிலை, இயற்கை சமநிலை ஆகியவற்றை பாதிக்கும். இந்த பூமியின் முக்கிய அங்கமாக மண் வளம் உள்ளது. இது நமது வாழ்வுக்கான அடித்தளம். பிரதமர் மோடி, மண் வளம் காப்பதிலும் அதனை மேம்படுத்துவதிலும் இதயபூர்வமான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் இது மிகச் சிறந்த திருப்புமுனை திட்டமாக அமையும்’ என்று கூறினார்.