சம்ஸ்கார் பாரதி மகளிர் தினம்

சம்ஸ்கார் பாரதி சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பொதிகை தொலைக்காட்சி செய்தி இயக்குனர்  டி. சண்முகம் தலைமையில் , கலைமாமணி நாட்டுப்புறப் பாடகி சின்னபொண்ணு குமார், காயத்திரி ரகுராம், சசிகலா புஷ்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் பரத நாட்டியம், நடிப்பு, யோகா, பாடல், சொற்பொழிவு, சிலம்பம் போன்றவை இடம் பெற்றன. வந்த விருந்தினர்கள் மாத்ரு சக்தி சார்பில் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் சம்ஸ்கார் பாரதியின் பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் நாராயண பட், இருளப்பன், ராதாகிருஷ்ணன், கவிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.