பி.எப்.ஐயுடன் தொடர்புடைய சமாஜ்வாதி தலைவர் கைது

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையால் (ஏ.டி.எஸ்) கைது செய்யப்பட்டவர்களில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நகரத் தலைவர் அப்துல் காலிக் அன்சாரியும் ஒருவர். உ.பி’யில் பி.எப்.ஐ.யுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சுமார் 211 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சனிக்கிழமை முதல் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனைகள் மே 6ம் தேதி தொடங்கி மாநிலமெங்கும் 20 மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை நடத்தப்பட்டது. இடங்களில் நடத்தப்பட்டது. லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது சோயிப், பர்வேஸ் அகமது மற்றும் ரயீஸ் அகமது என்ற இரண்டு பி.எப்.ஐ உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். ஏ.டி.எஸ்சால் கைது செய்யப்பட்ட 70 சந்தேக நபர்களில் 11 பேர் ஷாம்லியைச் சேர்ந்தவர்கள், பத்து பேர் காஜியாபாத்தைச் சேர்ந்தவர்கள், ஒன்பது பேர் லக்னோவைச் சேர்ந்தவர்கள், எட்டு பேர் வாரணாசியைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏ.டி.எஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் குறித்தும் விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. விசாரணை மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அன்சாரி, தனது அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறி வந்தார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் புலந்த்ஷாஹர் நகர தலைவராக இருந்தார். சமீபத்தில், அதில் இருந்து விலகி, பி.எப்.ஐ பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவு என சந்தேகம் தெரிவிக்கப்படும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் சேர்ந்தார். ஆனால், ஒரே வாரத்தில் எஸ்.டி.பி.ஐயில் இருந்து விலகி, விவசாய சங்கத்தில் இணைந்தார்.