சபரிமலை தீர்த்தம் அவமதிப்பு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் கார்த்திகை மாத நடை திறப்பின்போது, கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு வந்திருந்தார். கோயிலின் மேல்சாந்தி அபிஷேக தீர்த்தத்தை அமைச்சருக்கும் தேவசம்போர்டு நிர்வாகிகளுக்கும் வழங்கினார். அமைச்சர் தவிர மற்ற அனைவரும் பயபக்தியுடன் தீர்த்தத்தை வாங்கி குடித்தனர். ஆனால் அமைச்சர் தீர்த்தத்தை குடிக்காமல் அதை இரண்டு கைகளிலும் தேய்த்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ராதாகிருஷ்ணன், ‘எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது, நான் சிறு வயது முதலே கோயிலுக்கு போனதில்லை’ என கூறினார். இது ஐயப்ப பக்தர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை நிர்வகிக்கும் அமைச்சரே இப்படி சொல்லலாமா, கடவுள் நம்பிக்கை உள்ளவரை தேவசம் அமைச்சராக நியமிக்காதது ஏன்’ என கேள்வி எழுப்பி உள்ளனர்.