உக்ரைனில் செயல்பட்டுவரும் வலதுசாரி ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுத்த ரஷ்ய அரசு, அதுதொடர்பான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது. இதனை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முகநூல் நீக்கியது. தங்கள் வரம்புகளுக்கு உட்படாமல் இருந்தால் இப்பதிவு நீக்கப்பட்டதாக முகநூல் நிறுவனம் கூறியது. இந்நிலையில், ரஷ்யாவின் கீழ் சபை நாடாளுமன்ற சபாநாயகர் வியாசெஸ்லாவ் வொலோடின், ரஷ்யாவின் மின்னணு ஒற்றுமையை முகநூல் நிறுவனம் குலைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘ரஷ்ய சட்டத்திற்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக சமூக வலைதளங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவற்றை தடை செய்யவும் அபராதம் விதிக்கவும் ரஷ்ய அரசுக்கு அதிகாரம் உண்டு’ என்று கடந்த ஆண்டு டிசம்பரில், ரஷ்ய நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, ரஷ்ய குடிமக்களுடைய உரிமையை பறிக்கும் வகையில் சில ஊடக விஷயங்களை முகநூல் தடை செய்துள்ளதாகக் கூறி, முகநூலுக்கு 13 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது ரஷ்ய தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பு அமைப்பான ‘ரோஸ்கும்நெட்சார்’.