சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல்யா திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், டிசம்பர் 17 முதல் 23 வரை ஏழு நாட்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. 30 பெரிய துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. இத்திட்டம் 27 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,891 திட்டங்களுக்கான 2,369 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2014ல் துவங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 7.13 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.