சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும் கரும்புக்காக நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கரும்பின் குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, 2021 – 2022 நிதியாண்டிற்கு 5 ரூபாய் உயர்த்தி, 1 குவின்டால் கரும்பின் குறைந்தபட்ச விலை 290 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குவின்டால் கரும்பை உற்பத்தி செய்ய ரூ. 155 செலவாகும் எனும் நிலையில், தற்போது குறைந்தபட்ச விலை 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, உற்பத்தி செலவை விட 87.1 சதவீதம் அதிகம். எனவே, விவசாயிகளுக்கு இனி செலவைவிட 50 சதவீதம் அதிக வருமானம் கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.