பாரதத்தில் உள்ளவர்களால் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச காப்புரிமை தாக்கல்களின் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது. இதன் மூலம் ஐ.பி கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் பின்னணியில் பாரதம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. , கடந்த ஜனவரி முதல் மார்ச் 2022 வரையிலான காலாண்டில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 19,796 காப்புரிமை விண்ணப்பங்களில், 10,706 விண்ணப்பங்கள் பாரத தேசத்தவர்களால் செய்யப்பட்டுள்ளது என்று வர்த்தக அமைச்சகம் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் முதல் 25 நாடுகளுக்குள் பாரதம் இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் லட்சிய நோக்கிய பாரதத்தை பயணத்தில் இது ஒரு முக்கிய படி. மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காப்புரிமை தாக்கல் கடந்த ஏழு ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. காப்புரிமைகள் வழங்குவது கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2015ல் 81வது இடத்தில் இருந்த பாரதம் 2021ல் 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது நாம் பெருமைபடத்தக்கது.