ஆகஸ்ட் 30ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் தொடக்கமாக, கேரளாவில் 15 லட்சம் வீடுகளில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொடிகள் ஏற்றப்பட்டன. கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள், வீடுகள், பொது இடங்களில் கொடிகள் ஏற்றப்பட்டன. கொரோனா பொதுமுடக்கம் இல்லாத காலங்களில் இதனையொட்டி கிருஷ்ண குடாரம், கோபூஜை, விருக்ஷ பூஜை, கோபிகைகளின் நடனம், நதி வழிபாடு, குட்டி கிருஷ்ணர்களுக்கு உணவளித்தல், இசை, நடனம், உறியடி உட்பட பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும். கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்துவதில் பால கோகுலம் அமைப்புதான் முன்னோடியாக உள்ளது. இம்முறை இவ்விழா கொரோனாவையொட்டி எளிமையாக நடைபெறுகிறது.