நாடு திரும்பிய கலைப் பொருட்கள்

மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, 1976ம் ஆண்டு முதல் இதுவரை 54 பழங்கால பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 41 பொருட்கள் (அதாவது சுமார் 75% பொருட்கள்) பிரதமர் மோடியின் கடந்த 7 ஆண்டுகால ஆட்சியில் திருப்பிப் பெறப்பட்டவை. காங்கிரஸ் 25 ஆண்டுகால ஆட்சியில் 10 க்கும் குறைவான தொல்பொருட்களை மீட்டுள்ளது. நேரு காந்தி குடும்பத்தின் அடுத்த தலைவர்கள் பாரதத்தின் கலாச்சாரம், நாகரீக செல்வத்தை பாதுகாப்பதை விட தங்களுக்கு செல்வத்தை குவிப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தனர்’ என தெரிவித்தார். மேலும், இந்த முயற்சியில் ஏ.எஸ்.ஐ, சி.பி.ஐ போன்ற பல்வேறு அமைப்புகளின் அயராத முயற்சிகளையும் ரெட்டி பாராட்டினார்.